tnpsc current affairs,current affairs in tamil,tnpsc current affairs study materials,tnpsc current affairs 2017,tnpsc current affairs 2018 in tamil & english,tnpsc current affairs in tamil,tnpsc,current affairs,tamil current affairs,tnpsc current affairs 2018,tnpsc current affairs 2017to 2018,tnpsc current affairs in tamil pdf | tnpsc model question paper

963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார்.

1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.

1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றனர்.

1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.

1858 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.

1863 – 4 ஆண்டுகள் எசுப்பானியாவின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.

1869 – சிறுவர்களைக் கொண்ட பரகுவைப் படைப்பிரிவினரை பிரேசில் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

1891 – ஆசியாவிலேயே உருக்கினாலான முதலாவது தேவாலயம், சென் செபஸ்தியான் பேராலயம், மணிலாவில் திறந்து வைக்கப்பட்டது.

1906 – சிலியில் 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.

1918 – செக்கோசிலோவாக்கியப் படையினருக்கும் சோவியத் செஞ்சேனைக்கும் இடையில் பைக்கால் ஏரியில் போர் இடம்பெற்றது.

1920 – போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.

1927 – கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் இருந்து அவாய், ஒனலுலு வரையான வானூர்திகளின் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டியில் பங்குபற்றிய எட்டு வானூர்திகளில் ஆறு காணாமல் போயின.

1929 – பாலத்தீனத்தில் பலத்தீனிய அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.

1930 – முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1946 – கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.

1960 – சைப்பிரசு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.

1964 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1987 – அமெரிக்காவின் டிட்ராயிட் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தரையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.

2005 – வெனிசுவேலாவில் மேற்குக் கரிபியன் விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 160 பேரும் உயிரிழந்தனர்.

2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – தென்னாப்பிரிக்காவில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.

2013 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர், 59 பேர் காணாமல் போயினர்.



Keywords: tnpsc current affairs,current affairs in tamil,tnpsc current affairs study materials,tnpsc current affairs 2017,tnpsc current affairs 2018 in tamil & english,tnpsc current affairs in tamil,tnpsc,current affairs,tamil current affairs,tnpsc current affairs 2018,tnpsc current affairs 2017to 2018,tnpsc current affairs in tamil pdf | tnpsc model question paper